வயல் அழுகிறது
வாழ்வுப் பிச்சை கேட்டு
பிளாட்..
நிஜங்கள் அழிகிறது
நிழல்கள் வாழ்கிறது
இறந்த என் தாத்தாபுகைப்படம்
வான மங்கையின்
வண்ணப் பருக்கள்
நட்சத்திரங்கள்
பிஞ்சுகளின்
கந்தகக்கூடாரம்
நர்சரி
வானப் பெண்ணின்
காதோரத்து ரோஜா
நிலா
***********************************************
ஒவ்வொரு கவிதையும் என் மனதை தைக்கிறது. உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஹைக்கூ அருமை ,விவசாயி ராக்கெட்டை பார்ப்பதும் அருமை ,அவர் மனதில் என்னென்ன கனவுகளோ ?வெடித்துக் கிடக்கும் நிலத்தை குளிர வைக்குமா ராக்கெட்?
ReplyDeleteத ம 1