Friday, October 2, 2015

மூட நம்பிக்கைகளும், பெண்களும்


போராடுங்கள் வெற்றி பெறுங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3

கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தங்கள் கணவர்களின் பெயர்களைச் சொல்வதில்லை. ஏனெனில் அவர்கள் கணவன் பெயர் சொல்லும் போது அவர்களின் ஆயுள் குறையும் என்று நம்புகிறார்கள். ( திரைப்படங்களில் தான் அடா, புடா, என்று கூப்பிடுவதும், வா, போ வென விளிப்பதும் சாத்தியம்) சில இல்லங்களில் வேண்டுமானால் அது சாதாரண்மான விஷயமாக இருக்கலாமே தவிர பெரும் பான்மை என்று கணக்குப் பார்க்கும் பொது கணவன் பெயர் சொல்வது மட்டுமில்லை, வாங்க, போங்க, என்று பன்னையில் தான் அழைக்க வேண்டும். இதெல்லாம் எழுதப்படாத விதி. ஆனால அந்தக் கணவர்கள் தங்கள் மனைவிகளை ஆயிரம் முறை பெயர் சொல்லலாம்.அடி வாடி என்று கூப்பிடலாம் . இவள் ஆயுள் தான் குறைந்தால் தான் என்ன?

ஒரு பெண் இன்னும் எங்கள் ஊரில் உப்பு என்று சொல்வதற்குப் பதில் வெள்ளை மணல் என்பாள். அவள் கணவன் பெயர் இத்தனைக்கும் சுப்பு, உப்புக்கும் சுப்புக்கும் என்ன சம்மந்தம்? ஆனால் அவள் அப்படித்தான்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொது அவர்கள் பெயர்கள் சொல்ல பல விஷயங்களைச் சொல்வார்கள். இதனால் ஒரே வீட்டில் எங்கள் நேரங்கள் வீணான கதையும் நடந்தது.

இவர்களில் தான் திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காவிட்டாலும், அல்லது ஆண் குழந்தைகள் பிறக்காவிட்டாலும் மறுமணம் செய்து வைக்கும் தாழ்ந்த நிலையும் ஏற்பட்டது. ஆண் குழந்தைகள் பிறந்தால் தான் வாரிசு என்று போற்றுவது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த ஆண்மகன், அம்மா, அப்பாவை கவனிக்க மாட்டான், அல்லது அவர்களிடம் பணம் பெறுபவனாக, தானே உழைக்காதவன்னாக இப்படி பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஏன் ஆண்கள் தான் வாரிசு என்று கொண்டாட வேண்டும் என்று தான் தெரியவில்லை.

அதே போல் ஒரு தந்தை அல்லது தாய் இறந்து போனால் அந்த வீட்டில் ஆண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் கொள்ளி வைப்பார்கள். அல்லது அந்த தாய் அல்லது தந்தையின் ஆண் வழியாக வந்த உரவினர்களில் வந்த ஆண்மகன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்பதும் சொல்லப்படாத எழுதப்படாத விதி. பெண் பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் கொள்ளிக்கு ஒரு பிள்ளை இல்லையா என்றே இன்றும் கேட்பார்கள்.
ஆண்கள் கொள்ளி வைத்தால் தான் தாங்கள் ஜென்ம பலன் கிடைக்கும் என்றும் பெண்கள் கொள்ளி வைக்க வந்தால் வைகுந்தம் போகும் வழி தெரியாது என்றும் சொல்கிறார்கள்.

மூல நட்சத்திரத்தில் பெண்பிரந்தால் அந்த பெண்ணை மணம் முடிக்க மாப்பிள்ளையின் பெற்றோர்கள் . ஏனெனில் மூலத்தின் மாமியார் பாடையில் என்பதால் மாமியார் அதாவது மாப்பிள்ளையின் அம்மா இல்லாத வீட்டிலிருந்து தான் பெண் கேட்டு வருவார்கள் இதுவும் ஏன் எனத் தெரியாமலெயே பின்பற்றப்பட்டு வருகிறது.

கல்யாணப் பேச்சு முடிந்து ஒரு பெண்ணை நிச்சயம் செய்த பிரகு அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது விபத்து அல்லது தொழிலில் நஷ்டம் ஏதும் ஏற்பட்டாலும் உடனே திருமணத்தை தடை செய்து விட்டு மூதேவி வரப்போறானு நிச்சயம் பண்ணியவுடன் இது போல ஆகுது என்று பேசுவார்கள்.இதே பெண்ணுக்கு ஆனாலும் அப்போதும் பெண் தான் அந்த வலியான பேச்சுக்களையும் தாங்க வேண்டும் அப்போதும் இவளுக்கு திருமண தோஷம் இருக்கு போல அதனால தான் திருமணத்திற்கு இவ்வளோ தடை வருது திருமணத்தை நிப்பாட்டு என்று சொல்லி தடைபட்ட திருமணங்களும் நிறைய .நிறைய.

கணவனை இழந்த பெண்கள் விதவை என்று அழைக்கப்பட்டதோடு அவர்களுக்கான உணவு மறுக்கப்பட்டது. ஒரு நேரம் தான் சாப்பிட வேண்டும். மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளை ஆடை உடுத்த வேண்டும். அல்லாது உடன்கட்டை ஏற வேண்டும். இதெல்லாம் நம் முன்னோர் பெண்கள் அனுபவித்து வந்தார்கள். இப்போது அப்படி இல்லை என்று வாதிடலாம். ஆனால் விவாகரத்து ஆன பெண்கள் எந்த சுப காரியங்களுக்கும் அழைக்கப் படுவதில்லை. ஒரு சில இடங்களில் இன்னும் இது போன்ர சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன

ஜாதகன் ஜோதிடம் என்று அன்றைய நாளில் தான் அப்படி சங்கடப்பட்டாள். இப்போது அப்படியில்லை. ஆனால் அதற்கும் அதிகமான வேறு வேறு சமூகக் காரணங்கள் அவளை பின்னுக்கு இழுத்த வண்ணமாய் இருக்கிறது. எது எப்படி நடந்தாலும் பெண் தனக்கான பாதையை தானெ தேர்ந்து எடுத்துக் கொள்கிராள். இயற்கையாகவே வலி தாங்கும் ஆற்றல் அவள் உடம்பில் மட்டும் அல்ல. அவள் மனதிலும் இருப்பதால் தான் இன்றும் அவள் வழி உயர்வாள். வழி நடத்துவாள்.

1 comment:

  1. From : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    ஒரு முக்கியமான விளக்கம்-
    போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை அனுப்பிய நண்பர் கோபி சரபோஜி ஒரு சந்தேகம் கேட்டிருந்தார்.
    அவரது கடிதத்தையும் அதற்கான விளக்கத்தையும் இங்குத்தருகிறோம். இந்தச் சந்தேகம், பலபடைப்புகளை ஆர்வத்துடன் அனுப்பிய
    நம் பதிவர்களுக்கும் இருக்கக் கூடும் என்பதால் அவற்றை இங்கு வெளியிடுகிறோம்-
    ----------------------------------------------------------------------
    வணக்கம்.
    சுற்றுச்சூழல் போட்டிக்கு எழுதிய என் இரண்டு கட்டுரைகளும்
    தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
    அது ஒரு வரிசையின் கீழ் இருந்தால் வாசிப்பவர்களுக்கு அடையாளமிட எளிதாய் இருக்கும் என நினைக்கிறேன். இரண்டு கட்டுரையின் தலைப்புகள்
    1. கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது? - 10
    2. முன் கையை நீட்டுங்கள். - 50

    நன்றி
    நட்புடன்
    மு.கோபி சரபோஜி. 05-10-2015
    ---------------------------------------------------------------------------------------------------
    நண்பர் கோபி அவர்களுக்கு வணக்கம்.
    இதுதான் நமது நண்பர் தி்ண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களின் கருத்தும்.
    அவரும் அப்படியே வரிசை எண்களை மாற்றிமாற்றி
    படைப்பாளிகளின் படைப்புகள் எலலாம் ஒரே இடத்தில் கிடைக்கும்படியாக
    அடுக்கவும் தொடங்கினார்.
    ஆனால், பொதுவாகவும் நடுவர்குழுப் பார்வையிலும் பார்த்தால்,
    முதலில் தரும் வரிசை எண்ணை மாற்றுவது நல்லதல்லவே?

    அதுமட்டுமின்றி, ஒருவரே பல படைப்புகள் அனுப்பும்போது
    அவரது படைப்புகள் எல்லாம் மற்றவர் வரிசை எண்ணை பின்னால் தள்ளிவிட்டு முன்னால் வந்துகொண்டே இருப்பதால், முன்தேதியில் அனுப்பியவரின் படைப்பு, அவர் வேறொரு படைபபு அனுப்பாத காரணத்தால், வரிசையின் பின்னால் போய்க்கொண்டே இருக்க வாய்ப்பாகும் அல்லவா?

    அனைத்தையும் படிக்க விரும்பும் ஒருவர்
    கடைசியாக அனுப்பிய படைப்பைக் கடைசியாகப் படிக்கும்படி வைப்பதில்
    ஒரு நுட்மும் உண்டு. படைப்புகளோடு அனுப்பிய தேதியை நாம் வெளிப்படையாக வைக்காதபோது, ஒரே கருத்தை மற்றொருவர் சொல்லும்போது
    எது அசல் எது நகல் என்பதை எளிதாகக் காணவும் முடியும்
    (படைப்புக்குள் போனால் பார்க்க முடியும் என்பது வேறு! அது இன்னும் நுட்பமாகப் பார்த்தால் அல்லவா தெரியும்?)

    இதனால்தான் “வந்த வரிசைப்படியே வரிசை எண்ணைத் தாருங்கள்,
    ஒருமுறை தந்த வரிசை எண்ணைக் கடைசிவரை மாற்றாதீர்கள்“
    என்று நம் வலைச்சித்தர் தனபாலன் அவர்களை நான் கேட்டுக்கொண்டேன்.

    இது சரிதானே நண்பா?
    சரிதான் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    நன்றியுடன், நா.முத்துநிலவன், ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு. 05-10-2015

    ReplyDelete