இன்று பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடினோம். வழக்கம் போல 3 சிறுமிகள் பாரத மாதா வேடமிட்டு வந்தனர்.
உடனே கார்த்திக் ராஜா எனும் மாணவன் எப்போ பார்த்தாலும் பெண்கள் தான் என்று சொல்லி விட்டு மீஸ் நாங்கள் பாரத மாதன் வேஷம் போடுறோம் என்றான்.
பாரத மாதாவுக்கு ஆண்பால் பாரத மாதன் என்று சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.
எனவே அவர்களையும் வேட்டி அணிந்து வரச் சொன்னேன் எங்கள் மாணவர்களின் அழகிய முகங்களைப்பாருங்களேன்
இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது மாணவர்கள் இன்று பாரத மாத வேடமிட்டு வந்தனர் .அனைவரையும் வரவேற்ற தலைமைஆசிரியர் சுவாதி இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் நமது நாட்டின் அனைத்து மன்னர்களையும் அழைத்து நாம் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்று கூறி நம்மை ஒருங்கிணைத்து இன்று இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.
உலகின் அனைத்து மக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவன் இந்தியனே. உலகிலேயே எல்லா சூழல்களாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நாடு இந்தியாதான். இது போன்ற ஒரே சீரான் தட்ப வெட்ப நிலையை வேறு எங்கும் காண முடியாது. நமது நாட்டைப் போல் பண்பாட்டில் கலாசாரத்தில் பெருந்தன்மை கொண்ட நாடும் வேறு எங்கும் கிடையாது என்பதில் நாம் என்றும் பெருமிதம் கொள்ளவேண்டும் .612 சமஸ்தானங்களை இணைக்கும் வல்லமை படைத்தவராக சர்தார் வல்லபாய் பட்டெல் இருந்திருக்கிறார். என்பதில் நாமும் பெருமிதம் கொள்வதோடு இது போன்ற விழாக்கள் கொண்டாடுவதின் நோக்கமே நமது முன்னோர்களைப்பார்த்து நாம் பல்வேறு வகையில் நம்து நடைமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.என்றார். அதனை தொடர்ந்து மாணவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மனிதசங்கிலி அமைத்தனர்.
தேசிய ஒருங்கிணைப்புப் பாடல்களை மாணவர்கள் பாடியதோடு சில தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடினர். பாரத மாதாவாக வேடமிட்டும் பாரத பாரம்பரிய உடை அணிந்தும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் கொண்டனர்.
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமதுரைப் பதிவர் திருவிழாவிற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
நல்ல முயற்சி. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete