Friday, January 10, 2014

என் இறைவா

என் இறைவா
எதற்காக?
யாருக்காக?
ஏன் இந்த வாழ்க்கை?
எல்லோருமே
குறை கூறுகிறார்கள்
யாரைபற்றியாவது
எல்லோருமே
தாங்கள்
நியாயவாதி என்கிறார்கள்
அப்படியானால் இவர்களில் ‘
நேர்மையற்றவர்கள் யார்?
எப்படி?
ஒருவன் ஒருசிலருக்கு நல்லவனாயிருந்தால்
பலருக்குத்
தீங்கிழைததவனாயிருக்கிறான்
பலருக்கு
நன்மை செய்பவனும்
சிலருக்கு துரோகம் செய்கிறான்
யாருக்கு செய்தால் என்ன?
அநியாயம் நியாயமாகுமா?
துரோகம் நீதியாகுமா?
ஆனால்
என் இறைவா
இவர்கள்
தவறுகளுக்கான
நியாயங்களைத் தேடி
அலைகிறார்கள்
குற்றங்களுக்கான
நீதியைத்
தயாரித்துக் கொள்கிறார்கள்
உண்மைகள் பலவும்
இங்கு
அலங்கரிக்கப்படுகின்றன
பொய்கள் பலவும்
ஆராதிக்கப்படுகின்றன
அலுவலகங்களீல் பார்க்கப்படாமல்
பல கோப்புகள் இருக்கலாம்
நிறைவேற்றப்படாத
பல செயல்கள் இருக்கலாம்
முடிக்கப்படாத
பலவேலைகள் இருக்கலாம்
ஆனால்
என் இறைவா
உனது கோப்புகளிலும்
இதே முறைதானா?
இதே முறையெனில்
உனக்கேன் உயர்வுகள்?
உனக்கேன் பக்தர்கள்?
உனக்கேன் கோவில்கள்?
****************************************

2 comments:

  1. அருமையான கேள்வி சுவாதி

    ReplyDelete
  2. பதில்கள் அனைத்தும் நம்மிடம் இருந்தும், நல்லாவே கேள்விகளை கேட்டீங்க...

    ReplyDelete