எங்கள் ஊரில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை..நான் எப்போதும் அங்கேயே காய்கறிகள் வாங்கிவிடும் வழக்கம் உள்ளவள். அங்கேயும் போக இயலாத வேளைகளில் உழவர் சந்தைக்குச் செல்வேன்.
ஆனால் ..( .இதிலென்ன சிறப்பு என்று முனுமுனுப்பது கேட்கிறது. )இன்று (17.01.2014) கத்திரி, வெண்டை,புடலை, உருளை, பாகல், செளசெள, தேங்காய், காளிபிளவர், வாங்கிவிட நிலையில் மிளகாய் இஞ்சி வாங்கினேன்.
ஒருவர் பீன்ஸ், பீட்ரூட், கேரட் போன்றவற்றை கூறுகளாகக் குவித்து பத்துரூபாய் என்று கூவிக்கூவி விற்றுக்கொண்டிடுந்தார். எனக்கு அந்தக்காய்கறிகள் தேவையாய் இருக்க வில்லை. மறு நாள் பாப்பாவின் தோழிகள் வீட்டுக்கு வருவதாக எனக்குத் தொலைபேசியிருந்ததால் அவர்களுக்கும் சேர்த்து வாங்க வேண்டியிருந்ததால் எல்லாவற்றிலும் சற்று அதிகமாகவே வாங்கியிருந்தேன். கொஞ்சம் திருப்தியும் ஏற்பட்டுப்போனது. மேலும் பயும் இழுக்க ஆரம்பித்து விட்டது ஒருவாரத்திற்கு மேலேதான் காய் வாங்கி விட்டேனே என்றும் தோன்றியது.
ஆனால் அதனை கூவி விற்ற வறியவரின் அருகே ஒரு பெண்மணி எஞ்சியிருக்கும் சில கூறுகளை யாரேனும் வாங்கிவிட மாட்டார்களா என்று போவோர் வருவோரை ஏக்கப்பார்வை பார்த்தது என் மனதை மிகவிம் குலைத்து விட்டது என்னால் அந்தப் பார்வையைத்தவிர்க்க முடியவில்லை. கடந்து அப்பால் செல்ல இயலாத அளவுக்கு அவரின் வாடிய முகம் என்னைத தாக்கியது.
இந்த 30 ரூபாய் என்னால் கொடுக்க இயலும் . அதனை வைத்து நான் ஒரு பெரிய பங்களா கட்டி விடப் போவதில்லை. ஆனால் அவர்களுக்கு அந்த 30 ரூபாய் வாங்கிய கடனைக் கொடுக்க, அல்லது அன்றைய உணவுக்கு உதவியாய் இருக்கும். வாங்கிய காய்களை தன்னால் விறக முடிந்தது என்று ஒரு நம்பிக்கையைத் தரும்.
இனி யாரும் வாங்கப் போவதில்லை. எனக்கு காய்கறிகள் அதிகம் இருந்தால் நல்லது தானே? அந்தப் பெண்மணியின் பார்வை மங்கிக்கொண்டு இருந்தது. ( எப்போதும் என் பள்ளி முடித்து வீடு வந்து பிள்ளைகளுக்கு ஏதேனும் குடிக்கக் கொடுத்து விட்டு அலுவலகம் சென்று அங்கு வேலை இருப்பின் அதனையும் முடித்து பின்னரே சந்தைக்குச் செல்லும் வழக்கம் வைத்திருந்தேன்,( வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்றால் நேரம் மாறுபடுமே ய்ன்றி எப்போதும் மாலை வேளைகளில் மட்டுமே என்னால் சந்தைக்குச் செல்ல இயலும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)
உடனே அந்த பெண்மணி அருகில் சென்று என் பையை வைத்து விட்டு நான் ஒரு கூறை எடுத்து விட்டு அந்தப் பெண்மணியின் முகம் பார்க்கவும் அதில் ஒரு வாழ்த்தும், அன்பும். நன்றியும் கொப்பளித்தது. பீன்ஸ் எடு ஆத்தா,.... ( அம்மா என்ற சொல்லுக்கு பதிலாக ஆயி என்றும் ஆத்தா என்பதும் எங்கள் ஊரின் வழக்குச் சொற்களாக இருக்கின்றன.) நான் கேரட் கூறுகளை எடுத்தவள் என்னையும் அறியாமல் அங்கே காய் கூறுகளை வாங்கிக் கொண்டிருந்த வேறு ஒருவரின் பையில் போட்டு 3 கூறுகளுக்கு 30 ரூபாய் கொடுத்து விட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு எந்து (activa) வண்டியில் வைத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டேன்.
வண்டியில் வரும் போது கற்பனை வேறு( என் மகளின் தோழிகளுக்கு ஏற்கனவே என்னை ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் அல்லது வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செல்லும் போதோ தங்கள் அம்மாக்களின் கைகளைப் பிய்த்து எறிந்து விட்டு ஓடி வந்து ஆண்ட்டி ...ஆண்ட்டி என்று கொங்சுவதும் ஏதேனும் நகைச்சுவையாகப் பேசி நங்கள் கருத்துக்களைப் பரிமாறிகொள்வதும் எப்போதும் வழக்கமான ஒன்றுதான்.ஒவ்வொரு நாளில் ஒரு குழந்தை ஒரு படி மேலாக இரவே போன் செய்து உங்களுக்கு நேரமிருந்தால் நாளை கலவை சாதம் செய்து சக்தியிடம் கொடுத்து விடுங்க என்று உத்தரவே போடுவாள். )
கற்பனையில் நான் உணவு தயாரித்ததை சப்பிட்டு எல்லாக்குழந்தைகளும் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு வஞ்சப்புகழ்ச்சி அணியாக ஏதேனும் சொல்வார்கள். அதற்கு நான் சிரிக்கிறேன். செல்லமாய் அவர்கள் தலையில் கொட்டுகிறேன். ஒருத்தி எனக்கு கீரிடம் அணிவிப்பாள் பாவனையாகத்தான். பொன்னாடை போர்த்துகிறேன் என்று அடுக்களை கைபிடித்துணியை தோளில் மாட்டுவார்கள் நாளைய நாள் சிரிப்பும் பேச்ச்ம் இந்த பெண் குழந்தைகளின் கும்மாளமும் வீட்டை நிறைக்கும். சப்தமும் என்னை நிறத்துக்க்கொண்டிருந்தது. அதே மகிழ்வோடு என் குழந்தைகளிடமும் அதனை பகிர்ந்து கொள்ள எண்ணி வீடு வந்த தும் காய்கறிப் பையைக் கொட்டினால்.................செளசெள 10 காய்கள்... ஒரு பெரிய முட்டைக் கோஸ்.. கத்தரிக்காய்... காய் கறிக டைகாரர்களே தூக்கி எறிவதை குறந்த விலை கொடுத்து வாங்குவது... என் பள்ளியின் ஆயம்மா அவர் வீட்டுக்கு இப்படித்தான் காய் வாங்கி வரும் கேரட் அதுவும் இது போல் தான் இருந்தது... ஆனால் பை நிறைந்திருந்தது...
முதலில் மிகப்பஎரிய ஏமாற்றமும் ஆதங்கமும் நாளைவரும் குழந்தைகளுக்கு நான் எப்படி சமைக்கப் போகிறேன் என்ற திகைப்பும் இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக அந்த எளியவரின் பால் என்க்கு இரக்கம் ஏற்பட்டது. இப்படித்தான் காய்கறிகளை வாங்கி இங்கு எத்தனை குடும்மங்கள் தங்கள் உணவாய்க் கொள்கின்றன?
ஏன் தங்களூக்கு என்று ஒரு நல்ல உணவை சாப்பிடக்கூட இயலாமல் வறிய நிலையில் ஏழ்மை இவர்களை ஆட்டுவிக்கிஅது என் று நினைத்த நேரத்தில் கண்கள் பனித்து விட்டது. என்னால் மீண்டும் 250 ரூபாய் செலவு செய்து கய்கறிகளை வாங்கி விட முடியும் ஆனால் தனது பையைத் தொலைத்து என் பையை எடுத்துச் சென்ற சகோதரன் இன்றுஇ தான் தன் வாழ்நாள் வரலாற்றில் காய்களையும் அதிகமான பல்வேறு விதமான காய்களையும் பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது.
அந்த எளிய சகோதரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பையை மாற்றி எடுத்து வந்ததின் மூலம் என்னால் ஒரு எளிய குடும்பத்திற்கு உதவ முடிந்தது... இறைவனுக்கு நன்றி.....

அடிப் பாவி,,பையை தொலைத்துவிட்டு பதிவைப்போடுகிறாய்..பரவாயில்லை பல திருடர்களின் மனைவிகள் கழுத்தில் ஒன்றும் இல்லாமல் இருப்பார்கள் என நினைத்து செயினை விட்டுவிடாதே...மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை நினைவில் வருகிறது..ம்ம்ம்..உனக்கு என்ன சொல்லலாம்...கவிதையை கட்டிக்கொண்டு விட்டு காகிதம் வீணாகுதேன்னு கவலையா படமுடியும்...என்னமோ போடா மாதவா....
ReplyDeleteகற்பனை கட்டுரை அல்ல என்று நினைக்கிறேன்... உங்களின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் .
ReplyDeleteஅந்த எளிய சகோதரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பையை மாற்றி எடுத்து வந்ததின் மூலம் என்னால் ஒரு எளிய குடும்பத்திற்கு உதவ முடிந்தது...உங்களின் உயர்ந்த உள்ளத்தை கட்டுரை புரிய வைத்தது .மகிழ்வே .
(சுந்தரர் .மு)
அய்... கட்டுரை என்று போட்டுவிட்டால் நாங்க நம்பிவிடுவோமா?
ReplyDeleteநல்ல கதையால்ல இருக்கு?... சும்மா சொன்னேன்... நல்ல அனுபவப் பகிர்வு. அதை கதையாகவும் எழுதலாம்...இப்படி சும்மாவும் எழுதலாம்.. அன்பின் பகிர்வு எப்படி எந்த வடிவத்தில் இருந்தாலும் படிக்க சுகமாகத்தான் இருக்கும். ஆமா... பையை மாற்றி எடுத்து வந்து கட்டுரை எழுதியது சரீ.... அடுத்தநாள் வந்த சக்தியின் நண்பர்களுக்கு என்ன சமையல் பண்ணிங்க... ஓட்டல்தானா? பகிர்வு அருமை!
மீண்டும் காலையில் உழவர் சந்தையில் வாங்கி சமைத்து அசத்தி விட்டேனாக்கும்... குழந்தைகள் வழக்கம் போல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஹா....ஒஹோ... தான் தெரியுமா?
ReplyDeleteநன்றி சுந்தரர் அய்யா
ReplyDelete